பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் காவலருக்கு ஸ்கூட்டி மற்றும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
திருச்சி மாவட்ட சரக போலீஸ் டி.ஐ.ஜி ராதா பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு சில அறிவுரைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து பெண்கள் உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான மணி என்பவர் தொடங்கி வைத்துள்ளார். இதில் பெண் காவலர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பெண்கள் உதவி மையத்தை தொடர்பு கொள்வதற்கான இலவச தொலைபேசி எண் 112, 181 வெளியிடப்பட்டது.
இந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டால் சம்பவ இடத்திற்கு பெண் காவலர்கள் விரைந்து சென்று தங்களின் பணியை செய்வார்கள் என மாவட்ட சூப்பிரண்டு தனது உரையில் கூறியுள்ளார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் பாடாலூர், மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு தலா ஒரு ஸ்கூட்டர் மற்றும் மடிக்கணினி வழங்கியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் என பலரும் கலந்து கொண்டனர்.