ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியைச் சேந்த மீனவர் சிங்கராஜூ. இவர் வழக்கம்போல சம்பவத்தன்று ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவருடைய வலையில் கச்சிலி (கடல் தங்க மீன் ) சிக்கியுள்ளது. இதையடுத்து அந்த மீன் வித்தியாசமாக இருந்ததால் இதுகுறித்து அவர் பலரிடம் கேட்டுள்ளார். அப்போது இந்த மீனின் மூலம் பல வகையான மருந்துகள் தயாரிக்க படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த மீன் வணிகரீதியாக சந்தையில் அதன் தேவை அதிக அளவில் உள்ளது. இதையடுத்து கரைக்கு வந்த அவர் அந்த மீனை ஏலம் விட்டபோது அந்த மீன் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. இதனையடுத்து சிங்கராஜு ஒரே ஒரு மீனால் ஒரே நாளில் இலட்சாதிபதி ஆகியுள்ளார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.