மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாறைமேடு பகுதியில் கட்டிட மேஸ்திரியான கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் வாலாஜா பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கஜேந்திரன் கலந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் திருமண விழா முடிந்தவுடன் கஜேந்திரன் பாறைமேடுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மேல்வேலம் பகுதியில் செல்லும் போது கஜேந்திரன் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாலையோரம் இருக்கும் மின்சார கம்பத்தில் மோதி தலைகுப்புற கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.