நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற நாடுகளும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் சில நாடுகளின் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து குறிப்பிட்ட அளவிலான விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று கடுமையாக பரவிய காரணமாக நேபாளத்தில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளும், உள்ளூர் விமான போக்குவரத்து சேவையும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நாளை முதல் சர்வதேச விமான சேவைகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து உள்ளூர் விமான சேவைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.