சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே சீனாவில் தான் முதன்முதலாக கடந்த 2019 ஆம் வருடத்தில் கொரோனா வைரஸ் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக பல்வேறு நாடுகளிலும் பரவி தீவிரமடைந்தது. ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனோ பரவ தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 24 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் சிலருக்கு அறிகுறிகள் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 91,653 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, 4636 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.