ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் கரே சிங்கராஜ் என்பவரால் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது கச்சிலி (கடல் தங்க மீன்) என்ற மீன் அவரது வலையில் சிக்கியுள்ளது. இந்த மீனின் மூலம் பல வகையான மருந்துகள் தயாரிக்கப் படுவதால், வணிக ரீதியாக சந்தையில் அதன் தேவை அதிக அளவில் உள்ளது. அவர் இதனை கண்டதும் கரைக்கு வந்து ஏலம் விட்டார். அப்போது அந்த மீன் 2,60,000 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் அந்த நபர் ஒற்றை மீனால் லட்சாதிபதி ஆனார்.
Categories