Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 31க்குள்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநிலங்களும் ரத்து செய்தன. ஆனால் +2 மதிப்பெண் எப்படி வழங்குவது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. அதில்  10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் இருந்து தலா 30 சதவீத மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும் என்றும், 12 ஆம் வகுப்பில் 40% வெயிட்டேஜ் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என தெரிவித்திருந்தது. இதையடுத்து அனைத்து தேர்வு வாரியங்களும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கிட்டு ஜூலை-31 க்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |