Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் போலி கணக்குகளை முடக்க…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் அதிகரித்து சைபர் குற்றங்களுக்கு வழி வகுப்பது உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. போலிக் அலகுகளால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப விதிகளின்படி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை முற்றிலும் முடக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை பயன்படுத்தி போலி கணக்குகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக உள்ளன.

திரைப் பிரபலங்களின் ரசிகர்கள் பலர் இந்த செயல்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் போலி செய்திகளில் திரை பிரபலங்கள் உட்பட பல துறையை சேர்ந்தவர் சிக்கிக் கொள்கின்றனர். இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மென்றால் போலி கணக்குகள் குறித்த புகார்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மத்திய அரசு ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |