ராமநாதபுரம் மாவட்டத்தில் தேனி தமிழ் புலிகள் கட்சி துணை செயலாளர் படுகொலை செய்யப்பட்டதிற்கு எதிராக கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட தமிழ் புலிகள் கட்சி துணைசெயலாளர் திருநாவுக்கரசர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கொலை செய்த கந்துவட்டி கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து திருநாவுக்கரசரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக 25 லட்சம் வழங்க வேண்டும் எனவும், அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் முருகன் தலைமை தங்கியுள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.