ஜெர்மனியின் பிரதமர் 2 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி கொண்டு அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவிய கொரோனாவிற்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அந்தந்த நாட்டின் அரசாங்கம் மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் 2 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அதாவது ஜெர்மனி நாட்டின் பிரதமர் முதலில் இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். அதன்பின் ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் தற்போது 2 ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். ஆனால் அது கோவிஷீல்டாக இல்லாமல் அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசியான மாடர்னாவை செலுத்தி கொண்டுள்ளார். இவருடைய இந்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.