Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடுகளுடனே அனுமதிக்கப்படுவர்… ஜப்பானில் நடைபெறும் போட்டிகள்… ஒலிம்பிக் நிர்வாகம் தகவல்..!!

ஒலிம்பிக் நிர்வாகம் ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான நடவடிக்கையில் ஜப்பான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி தினந்தோறும் 10,000 பேருக்கு ஒலிம்பிக் போட்டிகளை காண அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கு ஒலிம்பிக் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஒலிம்பிக் போட்டியை காண மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் எந்த நிலையிலும் கொண்டாட்ட மனநிலையில் வரவேண்டாம் எனவும், எந்தவிதமான கொண்டாட்டங்களுக்கும் போட்டிகளின் போது அனுமதி அளிக்கப்படாது, வெற்றி உற்சாகத்தில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவக் கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கைகளை தட்டி ஒருவர் மற்றொருவருடன் சியர்ஸ் செய்து கொள்ள கூடாது, அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் செய்யப்பட்ட வேண்டும், முக கவசம் என்பது பார்வையாளர்களுக்கு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் போட்டியாளர்களிடம் ஆட்டோகிராப் வாங்க கூடாது, மைதானங்களுக்கு வருவோர் ஆல்கஹால் உள்ளிட்ட பொருள்களை கொண்டு வர கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |