சினிமா பிரபலங்கள் தடுப்பூசி போட்ட தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட காரணத்தினால் தொற்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகளும், பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஆர்யா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள அந்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.