தேங்காய்ப்பால் தக்காளி சாதம்
தேவையான பொருட்கள் :
பச்சரிசி – 4 கப்
பச்சை பட்டாணி – 1 கப்
தேங்காய்ப் பால் – 4 கப்
வெங்காயம் – 4
தக்காளி – 12
பச்சை மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
நெய் – தேவையானஅளவு
செய்முறை :
முதலில் அரிசியுடன் தேங்காய்ப் பால், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும் .பிறகு அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, வேகவைத்த பட்டாணி சேர்த்து , நெய் பிரிந்து வரும் போது சாதத்தை சேர்த்துக் கிளறி இறக்கினால் சூப்பரான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் தயார் !!!