அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலவரத்திற்கு காரணமாக இருக்கும் சட்டவிரோதமான துப்பாக்கி வர்த்தகத்தை தடுப்பதற்கு 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் சமீபத்தில் துப்பாக்கிச்சூடு கலவரங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்றத்தை வலியுறுத்தியிருக்கிறார். அதன்படி, முதலில், சட்டவிரோதமாக, துப்பாக்கிகளை கடத்தும் வர்த்தகத்தை தடுக்க முடிவெடுத்த அதிபர், அதற்காக 5 பணி குழுக்களை அமைத்திருக்கிறார்.
இது தொடர்பில், அமெரிக்காவின் சட்டத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஒன்றரை வருடங்களில் கலவரங்கள் அதிகரித்திருக்கிறது. இதற்கு துப்பாக்கி கலாச்சாரம் முக்கிய காரணமாக உள்ளது. எனவே தற்போது சட்டவிரோதமாக இயங்கி வரும் துப்பாக்கி வர்த்தகத்தை தடுப்பதற்கு 5 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், துப்பாக்கி சூடு தாக்குதலில், சட்டவிரோதமாக கடத்தல் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்குழுக்களானது, லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ ,வாஷிங்டன், நியூயார்க் சிகாகோ மற்றும் வளைகுடா பகுதி போன்ற இடங்களில் இருக்கும் துப்பாக்கி கடத்தும் பகுதிகளில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.