கிணற்றில் குளித்து கொண்டிருக்கும்போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் குளித்து கொண்டிருக்கும் போது சிறுவன் பிரவீன்குமார் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை அடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றில் சிறுவனின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.