தமிழகத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கினால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் சில தளர்வு களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் புதியதாக உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸ் பல மாநிலங்களில் பரவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும் வெளிநாடுகளில் உருமாறிய வைரஸ் பரவியபோது தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. எனவே உருமாறி டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு விமானங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் சேவை தொடங்கினால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.