வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காவல்சேரி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் தனது அண்ணன் மகன் திருமணத்திற்காக கடந்த 20ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த தங்கச் செயின் மோதிரம் கம்மல் என 15 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.