Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த கடைகளுக்கு அனுமதி இல்லை… போலீசாரின் தீவிர சோதனை… நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த கம்ப்யூட்டர் சென்டர் உட்பட 7 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறையாத நிலையில் மாவட்டம் முழுவதிலும் உள்ள காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் என சில அத்தியாவசிய கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அனுமதியளிக்கப்படாத கடைகள் திறந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்தின் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சேலம் ரோட்டில் அனுமதியின்றி திறந்த கம்ப்யூட்டர் கடை திறந்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கம்ப்யூட்டர் கடைக்கு சீல் வைத்துள்ளனர். மேலும் அப்பகுதிகளில் அனுமதியின்றி திறக்கப்பட்ட பாத்திரக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Categories

Tech |