நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் 28-வது படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பவன் கல்யாணுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் பவன் கல்யாண் ஹரிஹர வீர மல்லு என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். மேலும் பவன் கல்யாணின் 28-வது படத்தை இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2013- ஆம் ஆண்டு வெளியான அத்தாரின்டிகி தாரேதி படத்தில் பவன் கல்யாண், சமந்தா இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.