ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் பிரித்தானிய பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் டெல்டா மாறுபாட்டின் பரவலை கட்டுபடுத்த பிரித்தானிய பயணிகளுக்கு கட்டாயம் தனிமைப்படுத்துதலை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரித்தானிய சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice, இவ்வாறு ஜெர்மன் அதிபர் கூறியிருப்பது நியாயமற்றது என்றும், ஒவ்வொரு நாடும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொந்தமாக முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது பிரித்தானியா தடுப்பூசி அடிப்படையில் முன்னேறி இருப்பதாகவும், இதுவரை 60 சதவீதம் 2 டோஸ் தடுப்பூசியும், 80 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பிரித்தானியா தற்போது முன்னேற்றப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் பிரித்தானிய பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமில்லை. ஒவ்வொரு நாடும் தங்களது முடிவினை தனிப்பட்ட முறையில் எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் ஜெர்மன் நாட்டில் பிரித்தானிய பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியில் வாழும் மக்களுடைய குடும்பத்தினரில் யாரேனும் ஒருவர் மரணித்தால் அவர்களுக்கு மட்டுமே விதிவிலக்காக பிரித்தானியாவில் இருந்து ஜெர்மனி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.