கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் இருப்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வார்கள் . ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருப்பதால் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆனி மாத பௌர்ணமியான இன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல கூடாது என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து கிரிவலப்பாதையில் தடுப்புகளை வைத்து இன்று அதிகாலை முதலே கிரிவலம் செல்லும் பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஆனாலும் சிலர் கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்வதால் போலீசாரால் அதனை தடுக்க முடியவில்லை. அத்துடன் கிரிவலப்பாதையில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளும் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இந்த ஊரடங்கால் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டதால் பக்தகர்கள் பலரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.