கன்னி ராசி அன்பர்களே..!
பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பயணங்கள் நல்லபலனைக் கொடுக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கி அன்பு பிறக்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் உண்டாகும். சமையல் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
நிதானத்தை பேணவேண்டும். யாரையும் அலட்சியம் செய்யவேண்டாம். குடும்பத்தில் இன்று மகிழ்ச்சியே நிலவும். சகோதரர்கள் துணை நிற்பார்கள். காதல் கைக்கூடி மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவச் செல்வங்களுக்கும் சிறப்பான தருணங்கள் அமையும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணியவேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்துவிட்டு, மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது இன்றையநாள் சிறப்பான நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.