நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் 18 வாய்த்துக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதற்கு ஸ்மார்ட்போன் உதவியுடன் கோவின் செயலியில் முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்ற விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முன்பதிவு, ஆதார் உள்ளிட்ட முகவரி ஆதாரம் இல்லாமலேயே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி மையனாக்களுக்கு நேரடியாக சென்று தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளலாம்.