Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல கன்னட நடிகர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை நயன்தாரா அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது.

A Superstar to play the villain to Lady Superstar? - Tamil News -  IndiaGlitz.com

இதை தொடர்ந்து ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் ஒரு படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் நயன்தாராவுக்கு வில்லனாக பிரபல கன்னட நடிகர் சுதீப் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |