பிரெட் அல்வா
தேவையான பொருட்கள் :
பிரெட் – 10 துண்டுகள்
சர்க்கரை – 3 கப்
முந்திரி, திராட்சை – ஒரு கப்
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பால் – தேவையான அளவு
ஏலக்காய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின் ஒரு கடாயில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு அதில் வறுத்த பிரெட் சேர்த்து கிளற வேண்டும். பிரெட் வெந்தவுடன், ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து கிளறி திரண்டு வந்ததும் , நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து இறக்கினால் சுவையான பிரெட் அல்வா தயார் !!!