Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க…. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள்  நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டதால் மாணவர் சேர்க்கை  வருகிறது.

இதற்கு மத்தியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி செல்லாமல் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகளின் கணக்கெடுப்பை நடத்தி மீண்டும் பள்ளியில் சேர்க்க கோரிய வழக்கில் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |