விஷால்-31 படத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் அகிலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் ரோஷினி கதாநாயகியாகவும், அருண் பிரசாத் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர் . இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் நடிக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தில் அகிலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது நடிகர் விஷாலின் 31-வது படமாகும். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, ரவீனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் . இந்நிலையில் விஷால் 31 படத்தின் படப்பிடிப்பின்போது விஷால், யோகி பாபுவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அகிலன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . மேலும் நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்திலும் அகிலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .