Categories
மாநில செய்திகள்

வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்த… ஸ்டாலினுக்கு தமிமுன் அன்சாரி பாராட்டு…!!

விவசாய சட்டம் குடியுரிமை திருத்தம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

நியூட்ரினோ, எட்டு வழிசாலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். இதையடுத்து வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் அறிவித்ததால், பல கட்சிகள், மக்கள் என்று அனைவரும் முதல்வர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அவர் கட்சியின் சார்பாக இந்த முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |