தால் கிரேவி
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு – ஒரு கப்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 7 பற்கள்
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை நன்றாக கழுவிக்கொண்டு இதனுடன் மூன்று கப் தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் , சீரகம், அரைத்த பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும். அதில் வேகவைத்த பருப்புக்கலவையையும் தேவையான உப்பையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சிறிதளவு கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கினால் சுவையான தால் கிரேவி ரெடி!!!