Categories
உலக செய்திகள்

”கலிபோர்னியாவில் 34 பேர் உயிரிழந்த படகு தீ விபத்து ”…. 2 இந்தியர்களும் பலி.!!

கலிபோர்னியாவில் சுற்றுலா பயணிகளின் படகு தீ பிடித்து  34 பேர் பலியானதில் 2 இந்தியர்களும் உயிரிழந்திருப்பது  தற்போது தெரியவந்துள்ளது.  

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டாகுரூஸ் தீவில் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறை  மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்த்து மகிழ்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். அங்கே ஸ்கூபா டைவிங் கிலும் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி 38 பேர் கொண்ட குழு ஒன்று படகில் அந்த தீவின் கடல் பகுதிக்கு சென்றது.

Image result for Two Indians killed in California fire

அப்போது படகில் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பயங்கரமாக தீ பிடித்தது இதையடுத்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் விரைந்து வந்து தீயை நீண்ட நேரம் போராடி அணைத்தனர். ஆனாலும் இந்த கோர தீ விபத்தில் 34 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

Image result for Two Indians killed in California fire

இந்த விபத்தில் 2 இந்தியர்களும் உயிரிழந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. அவர்கள் நாக்பூரைச் சேர்ந்த டாக்டர் சதீஷ் தியோபூஜாரி என்பவரின் மகள் சஞ்சீவி என்பவரும், அவரது கணவரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். சஞ்சீவியும், கணவரும் அங்கு பல் மருத்துவராகவும் காஸ்துப் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தனர். இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Categories

Tech |