மகரம் ராசி அன்பர்களே.! துணிச்சல் கூடும்.
இன்றைய நாள் மதிநுட்பத்துடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கின்றது. தொழில் வளர அனுகூல காரணிகள் கிடைக்கும். திருப்திகரமாக எல்லாம் வகையிலும் பணம் வந்து சேரும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்து காணப்படும். அண்டை வீடுகளில் இருப்பவர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு பாசம் காட்ட வேண்டும். கலைத்துறையினர் சீரான நிலையில் இருந்து எதையும் செய்ய வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களை நல்ல முறையில் கையாள வேண்டும். பணப்புழக்கம் கடந்த காலத்தை விட இப்பொழுது அதிகமாக இருக்கும். அதனால் பெரிய அளவு கவலைகள் எதுவும் இல்லை. துணிச்சல் கூடும். திட்டங்கள் நிறைவேறும்.
பெண்கள் எந்த ஒரு முயற்சியில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயமாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். காதல் உங்களுக்கு வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். காதலில் உள்ள சிரமங்களும் அதிலுள்ள பிரச்சனைகளும் சிக்கல்களும் கண்டிப்பாக தீர்ந்துவிடும். மனக்கவலையை விட்டுவிட வேண்டும். மாணவர்கள் படிப்பில் இன்று பிரம்மாண்டமாக சிந்திக்கக் கூடும். படிப்பில் வெற்றி பெற முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு