இருளாகவே இருக்கும் இந்தக் கிணறு மர்மமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஏமன் நாட்டின் ஏமன்- ஓமன் எல்லையில் உள்ள மஹ்ரா பாலைவனப் பகுதியில் இருக்கும் கிணறுதான் பல மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்த இயற்கையான கிணறு 90 அடி அகலமும் 300 முதல் 750 அடி ஆழம் வரை கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது .
இந்த கிணற்றுக்கு அருகில் செல்லும் பொருட்களை உள்ளே இழுத்துக் கொள்கிறது என்றும் இந்த கிணறுகள் பேய்களை அடைத்து வைத்திருக்கும் சிறை என்றும் அந்நாட்டு உள்ளூர் கதைகளில் சொல்லப்படுகிறது.
அத்துடன் இந்தக் கிணற்றில் சூரிய ஒளி கூட சில அடி ஆழம் வரை மட்டுமே தெரிவதால் இருளாக இருக்கும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.