ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் நகரில் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 33 விளையாட்டுகளில் 205 நாடுகளை சேர்ந்த 10000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் அரங்குகளில் மது விற்பனை செய்வதற்கும் குடிப்பதற்கும் தடை செய்ய முடிவு எடுத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீண்ட போராட்டங்களை சந்தித்து இந்த போட்டி நடைபெற உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories