Categories
ஆன்மிகம்

வீட்டில் எதிர்மறையான எண்ணங்களை விரட்ட…. இதை செய்து பாருங்கள்…. நல்ல பலன் கிடைக்கும்…!!!

நம்முடைய வீட்டில் எதிர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும் போது குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று நம்முடைய முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவதுண்டு. இந்த எதிர்மறையான பிரச்சினைகள் நீங்கி குடும்ப ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைப்பதற்கான ஒரு பரிகார முறை இருக்கிறது. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

பரிகாரம் முறை:

தினமும் மாலை நேரத்தில் சிறிது மஞ்சள் எடுத்து வீட்டு வாசலில் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்கள் வரைய வேண்டும். அந்த இரண்டு சதுரத்திலும் வேப்பிலையை வைக்கவேண்டும். ஆனால் வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு இருப்பது நல்லது.

பின்னர் அதன்மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை வைத்து எண்ணை ஊற்றி மஞ்சள் நிறத்தில் திரி போட்டு விளக்கு ஏற்றவேண்டும். மேற்கண்ட முறையில் தினமும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வந்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறையான விஷயங்கள் அனைத்துமே விரைவிலேயே நேர்மறையான விஷயங்களாக மாறுவதை நம்மால் பார்க்க முடியும்.

கிடைக்கும் பலன்கள்:

குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள், மனஸ்தாபம் போன்ற பிரச்சினைகள் தீரும்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

பிரிந்துவாழும் தம்பதியர்கள் ஒன்றிணைந்து வாழ ஆரம்பிப்பார்கள்.

Categories

Tech |