கருங்கடலில் எல்லையை தாண்டி நுழைந்த இங்கிலாந்து போர்க்கப்பலை ரஷ்ய ராணுவம் விரட்டியடித்துள்ளது.
இங்கிலாந்து ராயல் கடற்படையின் HMS defender என்னும் போர்க்கப்பல் ஜூன் 23ஆம் தேதி கருங்கடலில் இருக்கும் எல்லையை மீறியுள்ளது. இவ்வாறு மீறிய HMS defender போர்க்கப்பலை ரஷ்ய ராணுவம் விரட்டியடித்துள்ளது.
அதாவது ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டினுடைய போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை கொண்டு இங்கிலாந்தின் HMS defender போர்க்கப்பலை எச்சரிக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
மேலும் HMS defender போர்க்கப்பல் பயணிக்கும் பாதையில் ரஷ்ய நாடு தங்களுடைய போர் விமானத்தின் மூலம் குண்டுகளையும் வீசியுள்ளது. இந்த தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.