எச்1பி விசா மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளை அதிபர் ஜோ பைடன் விலக்கி உத்தரவிட்டார். இதன் மூலம் விண்ணப்பத்தில் ஏதாவது தவறு இருந்தால் அதனை சரி செய்து கொள்ள முடியும். அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேறுவதில் தடையை நீக்கவும், பயனாளிகளின் சுமையைக் குறைக்கவும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எச்1பி விசாவுக்கு மீண்டும் சலுகை அளித்துள்ளதால் இந்தியர்கள் அதிகம் பயன் பெறுவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வெளிநாட்டினர் தங்களின் நிராகரிக்கப்பட்ட எச்1பி விசா விண்ணப்பத்தை மீண்டும் தாக்கல் செய்யலாம் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும்பாலும் இந்தியர்களே வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் தொழில்நுட்பத்துறையில் பள்ளர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் விசா குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.