அமெரிக்காவில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸில் வசித்து வரும் லூயிஸ் டாமிங்குயிஸ் ( 18 ) எனும் இளைஞன் கடந்த 2-ஆம் தேதி அன்று 11 வயது சிறுமி ஒருவரை அவரது வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் அங்கு அந்த சிறுமியை லூயிஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்த சிறுமி, லூயிஸ் தன்னிடம் தொடர்ந்து சில நாட்களாக மோசமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லூயிஸ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து காவல்துறையினர் லூயிஸை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.