பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்க கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிக்பாஸ் போன்ற ஒரு மோசமான பண்பாட்டு கலாச்சார சீரழிவை இளைய தலைமுறையின் மனங்களில் விதைக்கின்ற குடும்ப பெண்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்கின்ற நிகழ்ச்சிகளை திரு.கமலஹாசன் அவர்கள் நடத்தக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம்.
அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஆகிவிட்டால் மக்களுக்கான அரசியல் செய்வதற்கு வந்த பிறகு மக்களை பாதிக்கின்ற மக்களை சீரழித்து குடும்ப உறவுகளை கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகளை சிதைக்கின்ற, புறம் பேசுகின்ற, பொய் பேசுகின்ற விளம்பரம் மற்றும் ரேட்டிங் காரணத்திற்காக ஒரு செட் அப் செய்யப்பட்ட உரையாடல்களை அமைத்துக் கொடுத்து, அதையே இன்றைக்கு கோடிக்கணக்கான மக்கள் பார்க்கின்ற ஒரு நிகழ்ச்சியாக மாற்றுகிற இந்த யுக்தி வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆதலால் இந்த நிகழ்ச்சியில் இனிவரும் காலங்களில் விஜய் தொலைக்காட்சி நிர்வாகமும் நடத்தக்கூடாது அதை ஒருங்கிணைத்து வழங்கிக் கொண்டிருக்கின்ற கமலஹாசனும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பங்கேற்க கூடாது என்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை தமிழக வாழ்வுரிமை கட்சி முன்வைக்கிறது என்று தெரிவித்தார்.