தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக அரசு அவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் வழங்கப்படும் கொரோனா நிவாரண தொகை 2000 ரூபாய் மற்றும் 14 பாகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பெறுவதற்கு இன்றே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவற்றை பெறாத மக்கள் இன்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணம் வழங்கும் கடைசி தேதியை நீட்டிக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.