நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களும் அடுத்தடுத்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒருசில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாதிப்பு சற்று குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே ஜூலை மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகளை தற்காலிமாக நிறுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இரண்டாம் அலை முடியும் தருவாயில் தளர்வுகள் அறிவித்தால், மூன்றாவது அலைக்கு காரணமாகிவிடும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.