6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புல்லரம்பாக்கம் பகுதியில் சுந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக சுந்தர்ராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் சுந்தர்ராஜன் 12 வயதுடைய 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மிரட்டி அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனை அறிந்தவுடன் மாணவியின் பெற்றோர் சுந்தர்ராஜனிடம் கேட்டபோது, அவர் மாணவியின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.