தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் தோட்டம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் லோகநாதன் தனது நண்பரான தனபால் என்பவருக்கு “நான் என் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தனபால் லோகநாதன் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளார். அதன் பின் லோகநாதன் சாந்தி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தனபால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் சடலத்தையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தை இல்லாத காரணத்தினால் மன உளைச்சலில் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.