வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆன்டனி பாஸி அமெரிக்காவில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மாறுபாடடைந்த கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் இந்த டெல்டா வகை தொற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. மேலும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இந்த டெல்டா வகை தொற்று 20 சதவீதம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த டெல்டா பிளஸ் வகை இதுவரை உருமாறிய வைரஸ் வகைகளை விட மிகவும் வீரியம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இரண்டே வாரத்தில் அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்க தடுப்பூசிகள் இந்த உருமாறிய வைரஸ் வகைக்கு எதிராக போராடுவது மக்களிடையே ஆறுதல் தரும் விதமாக உள்ளது என்று வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆன்டனி பாஸி கூறியுள்ளார்.