தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டனர்.
ஆனால் மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் பாடவாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் தேர்ச்சி என்று குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னீக் சேர நினைப்பவர்களுக்கு, 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நிலையில் 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு, நேரடி இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதிநேர மாணவர் சேர்க்கைக்கு https://tngptc.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.