Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனுடன் இணையும் ராகவா லாரன்ஸ்… வெளியான மாஸ் அறிவிப்பு… தெறிக்கவிடும் மோஷன் போஸ்டர்…!!!

வெற்றிமாறன், ராகவாலாரன்ஸ் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியின் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க இருக்கிறார் . இந்நிலையில் வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘அதிகாரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க இருக்கிறார் .

மேலும் இந்த படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார். தற்போது அதிகாரம் படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |