தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Categories