Categories
மாநில செய்திகள்

மேகதாதுவில் அணை கட்ட…. தமிழக அரசு கடும் எதிர்ப்பு…!!!

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் மத்திய நீர் ஆணைய தலைவர் தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கர்நாடக முதல்வர் கூறியதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி மத்திய அரசிடம் அனுமதி பெற முடியும்? அணை கட்ட அனுமதி பெறுவோம் என்று எடியூரப்பா கூறியது குழப்பம் ஏற்படுத்தக்கூடியது. அதுமட்டுமின்றி காவிரியின் குறுக்கே எங்கு அணை கட்டுவது என்றாலும் எங்கள் அனுமதி தேவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |