Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு சந்தேகமா இருக்கு… திருமணமான வாலிபர் கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றவாளியான அவரது காதலனை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காக்காயன்பட்டி கிராமத்தில் பாலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 7 – ஆம் தேதியன்று காக்காயன்பட்டி உள்ள மலைப்பகுதிக்கு சென்று செல்வராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து பாலுசாமி தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதில் முதல் கட்ட விசாரணையில் செல்வராணி அதே பகுதியில் வசிக்கும் சங்கர் என்ற திருமணமான வாலிபரை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து செல்வராணி தனது காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்திள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் மன உளைச்சலுக்கு ஆளான செல்வராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சங்கரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |