துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு இசைக்குழுவினர், குப்பைகளில் கிடக்கும் பொருட்களை சேமித்து அதனை இசைக்கருவிகளாக தயாரித்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.
இஸ்தான்புல் என்ற நகரத்தில் குப்பைகள் கொட்டி கிடக்கும் இடத்தில் இந்த குழுவினரின் இசை தேடல் தொடங்குகிறது. இவர்கள் குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், மரத்துண்டுகள், கயிறு போன்றவற்றை சேகரிக்கிறார்கள். அதன்பின்பு அதனை பாரம்பரிய வாத்தியங்களாக மாற்றி விடுகின்றனர்.
இசைக் கலைஞர்கள், பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து இசைக்கருவிகள் தயாரிக்கும் இந்த வித்தியாசமான முயற்சிக்கு துருக்கியில் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது. மேலும் இவர்களது வீடியோக்கள் இணையதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.