மது பாட்டிலுக்குள் சுகாதாரமற்ற முறையில் உருண்டை வடிவில் காகிதம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கின் போது தமிழக அரசு சில தளர்வுகள் உடன் மதுபான கடைகளை திறக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள கயர்லாபாத் பகுதியில் மதுபான கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த மதுபான கடைக்கு செல்வராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து செல்வராஜ் வாங்கிய மூடி திறக்கப்படாத மதுபான பாட்டிலுக்குள் பெரிய உருண்டையாக ஒரு காகித குப்பை தென்பட்டுள்ளது.
அப்போது செல்வராஜ் அங்குள்ள மதுகடை ஊழியர்களிடம் சுகாதாரம் இல்லாத மதுபானங்களை விற்று வருவதாக தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தகவலறிந்து சென்ற சுகாதார காவல்துறையினர் மதுபானக்கடை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.